சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழில் வெளியான உன்னாலே உன்னாலே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தனீஷா முகர்ஜி. தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரை தொடர்களிலும், வெப் சீரிசிலும் நடித்து வருகிறார். ஹிந்தி பிக்பாஸ் 7-வது சீசனில் இரண்டாம் இடம் பிடித்தார்.
தனீஷா முகர்ஜி கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.