பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' |
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பு 'பிரிக்ஸ்' என அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் சார்பில் பிரிக்ஸ் திரைப்பட விழா 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
6வது பிரிக்ஸ் திரைப்பட விழா கோவாவில் 52வது சர்வதேசத் திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருது 'அசுரன்' தமிழ்ப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, இந்தப் படத்திற்காக அவர் தேசிய விருதையும் பெற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது பெற்றது குறித்து டுவிட்டர் தளத்தில், “ஒரு முழுமையான மரியாதை” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
'ஆன் வீல்ஸ்' என்ற பிரேசிலியன் திரைப்படத்தில் நடித்த லாரா போல்டோரினி சிறந்த நடிகை விருதைப் பெற்றார். 'பராகத்' என்ற தென்னாப்பிரிக்கத் திரைப்படமும், 'தி சன் அபவ் மீ நெவர் செட்ஸ்' என்ற ரஷியத் திரைப்படமும் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பகிர்ந்து கொண்டன. பிரேசிலியன் இயக்குனர் லுசியா முராத், 'அனா' என்ற டாகுமென்டரி படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார். 'எ லிட்டில் ரெட் பிளவர்' என்ற சீனப் படத்தை இயக்கிய இயக்குனர் யான் ஹான் சிறப்பு குறிப்பீடு விருது பெற்றார்.