புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
கே.கே.பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 14 ஆண்டுகளாக மருந்தக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார் மில்லத் அகமது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்து வருகிறார். ஊரடங்கு காலகட்டத்தில், இந்தியாவில் இறந்துபோன தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் அவர் பெரிதும் மனமுடைந்தார். அதிலிருந்து மீள எழுதத் தொடங்கியவர் அமராவதி என்ற வரலாற்று நாடகத்தை எழுதி நூலாக மாற்றினார். அது விரைவில் அறிமுகம் காண உள்ளது.
தற்போதைய கோவிட்-19 சூழலில் இருந்து தனது மனநிலையை மாற்றவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் யோசித்தார். டிசம்பர் 2020ல் நேரடி பாடல் இசையமைப்பு பதிவு நிகழ்வை உருவாக்கி, இயக்கி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். ஜூன் மாத பள்ளி விடுமுறையின் போது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான நீதிக்கதை சொல்லும் போட்டியை நடத்தி, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகப் பரிசுகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சார்பாக தனி நபர் சாதனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். கோவிட்-19 தொற்று பாதிப்பால் உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது கனவு நனவாகும் முன்பே இறந்து போயினர். அதை மனதில் வைத்து ஆங்கிலத்திலும், தமிழிலும் ஐந்து வார்த்தைகளில் "இறந்தவர் தனது கனவுகளைத் தோண்டி எடுக்கிறார்" மிகச்சிறிய கதையை எழுதி புதிய உலக சாதனை படைத்தார்.
நடிப்பு (ஒரே ஒரு பாத்திரம்), ஒப்பனை, உடைகள், கலை, உதவி ஒளிப்பதிவு, பின்னணி, ஒலிக்கலவை, தலைப்புகள், தயாரிப்பு வடிவமைப்பு, எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என 16 பொறுப்புகளைத் தன்முனைப்புக் குறும்படமான அறியில் செய்துள்ளார். இதன் மூலம், ஒரு குறும்படத்தில் அதிக பொறுப்புகளைச் செய்த ஒரே நபர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார்.
மேலும் இந்தக் குறும்படம் சிங்கப்பூர் திரைப்பட விழா விருது 2021 மற்றும் நோபல் சர்வதேச திரைப்பட விழா விருது 2021 வென்றது. இந்த இரண்டு சாதனைகளும் அக்டோபர் 2021 இல் கலாமின் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உலக சாதனைகளைப் பாராட்டி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சார்பாக, கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.