விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் |
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது ஹிந்தியில் ரவி உட்யவார் இயக்கத்தில் சித்தான்ட் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் 'யுத்ரா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா.
இப்படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் நடித்த போது மாளவிகாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து, “நீங்கள் ஒரு ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது, காயங்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு தான் லேசான கீறல்களாக உணர முடியும்,” எனப் பதிவிட்டு காயமடைந்த தனது கையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மாளவிகா பொதுவாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகமான கிளாமர் புகைப்படங்களைத்தான் பகிர்வார். காயமடைந்த இந்த புகைப்படப் பதிவிற்கம் கூட இரண்டு லட்சம் ரசிகர்கள் லைக் போட்டுள்ளார்கள், பழக்க தோஷம் போல..