டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள 'மாநாடு' படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்ஜே சூர்யா. இக்கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த்சாமி தான் நடிப்பதாக இருந்தது. படம் கொஞ்சம் தாமதமானதால் அவருக்குப் பதிலாக எஸ்ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி 4ம் தேதி டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். அந்த டுவீட்டை அப்போதே குறிப்பிட்டு எஸ்ஜே சூர்யா, “நன்றி தயாரிப்பாளர் சார், இயக்குனர் வெங்கட்பிரபு சார். என்ன ஒரு கதை, என்ன ஒரு விவரிப்பு. அற்புதமான விவரிப்பால் மிரண்டு விட்டேன். இந்த புராஜக்ட் கண்டிப்பாக எல்லைகளைக் கடக்கும். எனது நண்பன் சிம்புடன் இணைவது பெரும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் தான் பதிவிட்ட அந்த டுவீட்டை தற்போது மீண்டும் குறிப்பிட்டு “பிப்ரவரி 4, 2020ம் தேதியன்று இயக்குனர் வெங்கட் பிரபு 'மாநாடு' படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். அவருடைய அற்புதமான விவரிப்பைப் பார்த்து அவரைக் கட்டித் தழுவி அன்றைய தினமே அந்த டுவீட்டைப் பதிவிட்டேன். இன்று இந்த உலகமே மாநாடு படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த லின்க்கை மீண்டும் ஷேர் செய்வதில் மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார்.
'மாநாடு' படத்தில் சிம்புவின் நடிப்பைவிட எஸ்ஜே சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.