ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அரசியலாகட்டும், சினிமாவாகட்டும் இந்த இரண்டு துறைகளின் முக்கிய அதிகார மையங்களாக திகழ்ந்த, இப்போதும் திகழ்கின்ற ஏரியா என்றால் அது சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதி தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் இங்கே தான் உள்ளன. சமீபத்தில் கூட நடிகர் தனுஷும் இங்கே இடம் வாங்கி தனி வீடு கட்டு ஒன்றை பிரமாண்டமாக கட்டி வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி நடிகையான நயன்தாராவும் தற்போது இந்தப்பகுதியில் உள்ள பிரமாண்டமான அபார்ட்மெண்ட் ஒன்றில் நான்கு படுக்கையறை வசதி கொண்ட இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நல்ல நாள் பார்த்து இந்த வீட்டில் குடியேற இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பின் அமைதியான இந்த ஏரியாவில் தான் வசிக்கவும் விரும்புகிறாராம்.