ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛‛ஆர்ஆர்ஆர்'' (இரத்தம் ரணம் ரௌத்திரம்). சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கும் கதையாக உருவாகி உள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் உயிரே என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.
விழாவில் ராஜமவுலி பேசியதாவது : ‛‛சில வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். ஆர்ஆர்ஆர் படத்தில் மிகப்பெரிய ஆக் ஷன் காட்சிகள் உள்ளன. அந்த காட்சிக்கு பின் பெரிய எமோஷன் இருக்கும். அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல்.
அண்ணன் மரகதமணி அவர்கள் தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி'' என்றார்.




