புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சூர்யாவின் முக்கியமான சில படங்களில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் முக்கிய படங்களாகும். இந்த படங்களில் தான் சூர்யாவை ஒரு சிறந்த நடிகராக செதுக்கினார் பாலா. ஆனபோதிலும் அதன்பிறகு அவர்கள் இணையாத நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.
ஜெயபீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சிவா, ரவிக்குமார் என சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில் தற்போது டிசம்பரில் மாதம் முதல் பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை முதலில் அதர்வாவை வைத்து பாலா இயக்கயிருந்த நிலையில் சூர்யா தயாரிக்க இருந்தார். ஆனால் திடீரென்று கதையில் செய்த சில திருத்தங்கள் காரணமாக இப்போது அந்த படத்தில் சூர்யாவே நாயகனாகி விட்டார்.