‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

திருமணம் ஆன பின்னரும் கூட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகை என்கிற தனது ஸ்தானத்தை சமந்தா இழக்கவே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா நடித்த பேமிலிமேன்-2 என்கிற வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்துவிட்ட சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டில் நுழைய தடையேதும் இருக்காது. இந்தநிலையில் எல்லாம் சரியாக அமைந்தால் நான் ஏன் பாலிவுட்டில் நடிக்க கூடாது என கேட்டுள்ளார் சமந்தா.
இதுகுறித்து கூறியுள்ள அவர், “நல்ல கதை தேடிவந்தால் நான் நிச்சயம் ஆர்வமாக இருக்கிறேன். மொழி என்பது எனக்கு பெரிய விஷயம் அல்ல, நல்ல ஸ்க்ரிப்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.. கதை நம் இதயத்தை தொட வேண்டும்.. அது எனக்கு பொருந்துகிறதா என பார்க்க வேண்டும்.. அந்த கதையை என்னால் சரியாக செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். இந்த கேள்விகள் தான் ஒவ்வொருமுறை புதிய படம் ஒப்புக்கொள்ளும்போது என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. என்னை பொறுத்தவரை இதுதான் முக்கியமான விஷயம்” என கூறியுள்ளார் சமந்தா.




