இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2019ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கைதி. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் மேலும் சில மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. விரைவில் ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நடிகர்களில் ரஜினிக்கு பிறகு கார்த்தி நடிக்கும் ஒரு படம் ஜப்பானில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில் அடுத்து கார்த்தி, லோகேஷ் கனகராஜ் இணையும் கைதி-2 படம் எப்போது தொடங்குகிறது என்கிற எதிர்பார்ப்புகள் நிலவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து தற்போது ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அதையடுத்து கைதி படத்தை இயக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே கைதி படப்பிடிப்பு நடந்தபோது இரண்டாம் பாகத்திற்கான பாதி காட்சிகளை படமாக்கி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதனால் மீதமுள்ள காட்சிகளை குறுகிய காலத்தில் படமாக்கி 2வது பாகத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.