'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இல்லை என்றாலும் மீடியாவில் எப்போதும் பரபரப்பாகப் பேசப்படுவார். அவரது சமூக வலைத்தளப் பதிவுகளை ரசிப்பதற்கென்றே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஜான்வி கபூர் தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு அவருடைய சுற்றுப் பயணத்தின் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் சில பிகினி புகைப்படங்களும் அடங்கும். அக்கா, தங்கை இருவரும் துபாய் கடற்கரையில் நடமானடிய புகைப்படங்களும் உள்ளன.
குஷியும் அவரது பங்கிற்கு சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குஷி குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜான்வி 'லுங்கி டான்ஸ்' என்று மட்டும் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஜான்வியின் புகைப்படங்களுக்கு வழக்கம் போல ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.