'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமையன்று ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', விஷால் ஆர்யா நடித்த 'எனிமி' ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நேற்று வரை மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அதன் காரணமாக கடந்த ஐந்தாறு நாட்களாகவே தியேட்டர்களில் மக்களின் வருகை மிக மிகக் குறைவாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது. ஆனால், 'அண்ணாத்த' படத்தின் வசூல் 200 கோடி, 'எமினி' படத்தின் வசூல் 20 கோடி என சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக வசூல் நிலைமை மோசம் என்பதால் அவ்வளவு வசூல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
மழை வெள்ளத் தாக்கத்தால் மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் வருவதும் சந்தேகம். உண்மை நிலை இப்படியிருக்க படங்களின் வசூலை வேண்டுமென்றே உயர்த்திக் காட்ட 'டிராக்கர்கள்' என்ற போர்வையில் சிலர் செயல்பட்டு வருவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள்.