'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்ற விஜய்சேதுபதி விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட வீடியோ பரபரப்பை கிளப்பியது. இந்த தாக்குதல் தொடார்பாக விஜய்சேதுபதி புகார் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் விஜய்சேதுபதியை தாக்கியது நான்தான் என்று மகா காந்தி என்பவர் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னேன். உடனே அவர் 'இது தேசமா' என்றார். அதற்கடுத்ததாக குரு பூஜைக்கு சென்று வழிபட்டீர்களா என்று கேட்டேன். யார் குரு என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியபோது விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் என்னை தாக்கினார்கள் அதனால் நான் திருப்பி தாக்கினேன். என்கிறார்.
இதுகுறித்து விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்ததால் சின்ன விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுவிட்டது. தாக்கிய நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிரச்சனை தீர்க்கப்பட்டது.
தாக்கிய அந்த நபர் குடிபோதையில் இருந்தார். மேலும் மாஸ்க் அணிந்திருந்ததால் அவர் போதையில் இருந்தது தெரியவில்லை. அவர் என் ரசிகர் இல்லை. நான் பாதுகவாலர்களுடன் பயணம் செய்வது இல்லை. என் நெருங்கிய நண்பரை மட்டுமே அழைத்துச் செல்வேன். யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாவலர்களுடன் செல்ல விரும்பவில்லை. எனக்கு மக்களை சந்திக்க வேண்டும், பேச வேண்டும்.
இவ்வாறு விஜய்சேதுபதி கூறியிருக்கிறார்.




