பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‛‛வாசாமி'' பாடல் மூலம் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் அருண்பாரதி. ஏற்கனவே விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள இவர், இதே கூட்டணியில் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ளார்.
இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதி கூறியதாவது: வாசாமி பாடலை ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பெரும் தெய்வங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் சிறு தெய்வங்களுக்கு தரப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நம் குல தெய்வங்களுக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. மறந்து போன சிறு தெய்வ வழிபாட்டை நினைவு கூறும் வகையிலும், வேட்டைக்கு செல்லும் குலசாமியின் பெருமை சொல்லும் வகையிலும் இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.
இனி கிராமங்களில் கருப்பசாமி, கோவிந்தசாமி, சுடலைமாட சாமி, மதுரை வீரன் சாமி என்று யாருக்கு வழிபாடு நடத்தினாலும் அங்கு இந்த வாசாமி பாடல் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது பிச்சைக்காரன்- 2, காக்கி, கடமையை செய், கார்பன், நா நா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன் என்றார்.




