விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரியா பாவனி சங்கர், 'யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால், என்னுடைய ரியாக்சன் இதுதான்' என்று கும்பிடும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்களும் பிரியா பவானி சங்கர் காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை, நடிகை பிரியா பவானி சங்கர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பிறந்தநாளில் தங்களுக்கு சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரவும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவு இவர்களின் பிரிவை தெரிவிப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.