அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள், நடிகைகள் பலருக்கும் தங்களது படங்கள் தீபாவளி நாளில் வெளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த அளவிற்கு தீபாவளி ரிலீஸ் என்பது விசேஷமானது. இன்னும் சிலருக்கு அப்படியான வாய்ப்பு அமையாமல் தான் இருக்கிறது. ஆனால், கதாநாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில், அதுவும் தீபாவளி நாளில் வெளியாகிறது என்றால் அது ஒரு அதிர்ஷ்டம் தான்.
விஜய் சேதுபதி, சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் கிளைமாக்சில் வரும் ஏலியன் ஆக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டிக் டாக் பிரபலம் மிர்ணாளினி ரவி. அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த 'சாம்பியன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கிலும் அதே வருடம் வெளிவந்த 'கட்டலகொன்டா கணேஷ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த தீபாவளிக்கு நவம்பர் 4ம் தேதி மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடித்த 'எனிமி, எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்கள் வெளியாகின்றன. தியேட்டர்களில் வெளியாகும் 'எனிமி' படத்தில் விஷால் ஜோடியாகவும், ஓடிடி தளத்தில் வெளியாகும் 'எம்ஜிஆர் மகன்' படத்தில் சசிகுமார் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
மற்றவர்களுக்கெல்லாம் இந்த வருட தீபாவளி சிங்கிள் தீபாவளி, ஆனால், மிர்ணாளினிக்கு மட்டும் டபுள் தீபாவளி.