‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) மாரடைப்பு ஏற்பட்டு தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார். மோட்ச தீபம் ஏற்றிய பின்னர் அவர் புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையட்டும் என்று மூன்று முறை கூறினார். இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, ‛அன்பர் புனித் ராஜ்குமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான காலகட்டத்தில் அவரது குடும்பத்தாருக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.




