ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு கன்னடத் திரையுலக ரசிகர்கள், திரையுலகினரை மட்டுமல்ல இந்தியத் திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த சில மணி நேரமாகவே அவர் மறைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அவர் மறைந்த செய்தி வெளியில் வந்தது. பல சினிமா பிரபலங்கள் உடனடியாக இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
புனித் ராஜ்குமாரின் அண்ணனான சிவராஜ்குமார் நடித்துள்ள 'பஜ்ராங்கி 2' என்ற படம் இன்று தான் தியேட்டர்களில் வெளியானது. அண்ணன் படத்திற்காக 7 மணி நேரங்களுக்கு முன்பு டுவிட்டரில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் புனித்.
இரு தினங்களுக்கு முன்பு அப்படத்திற்காக நடைபெற்ற விழா ஒன்றில் புனித் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதில் 'கேஜிஎப்' நடிகர் யஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இரு தினங்களுக்கு முன்பு சினிமா நிகழ்வில் கலந்து கொண்டவர், காலையில் டுவீட் போட்டவர் மதியம் இல்லை என்பது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.