தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாநாடு'. டைம் லூப் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்ட படம் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் நவ., 25க்கு படத்தை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இப்படத்திற்காக டப்பிங் பேசியது குறித்து எஸ்.ஜே.சூர்யா டுவிட்டரில், ‛‛மாநாடு படத்தில் என் கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை 8 நாளில் முடிக்க வேண்டியதை 5 நாட்களில் முடித்துவிட்டேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகுத்தண்டு, தொண்டை அனைத்தும் உடைந்துவிட்டன. வலி பிண்ணுது, 10 நாட்களாவது ஓய்வு தேவை. அவ்வளவு வலி. ஆனாலும் படத்தை பார்த்ததும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. நவ., 25 தாண்டா தீபாவளி'' என பதிவிட்டுள்ளார்.