ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெய் பீம்'. இப்படத்தின் தமிழ், தெலுங்கு டிரைலர் கடந்த வாரம் வெளியானது. தற்போது கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். அடுத்து ஹிந்தியிலும் வெளியிட உள்ளார்களாம். முதலில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்தான் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். தற்போது ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தின் தமிழ் டிரைலர் யு டியூபில் 12 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 3 லட்சத்திற்கும் கூடுதலான பார்வைகளையும் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.