புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
67வது தேசிய திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். இவர்களுடன் தாணு, வெற்றிமாறன், இமான், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கும் தேசிய விருது கிடைத்தன.
![]() |
67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் இன்று(அக்., 25) நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். தமிழில் சிறந்த படமாக தேர்வான வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்திற்கு கிடைத்தது. இந்த விருதை படத்தை தயாரித்த தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார்.
![]() |
இதேப்போல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார். அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
![]() |
பார்த்திபன் ஒருவர் மட்டுமே இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேர்வுக்குழுவின் சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதை நடிகர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார். இந்த படத்தில் சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருது சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டது.
![]() |
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது.
![]() |
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.
![]() |
சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்தாண்டு இருவருக்கு கிடைத்தது. ஒருவர் நடிகர் தனுஷ். மற்றொருவர் ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். போன்ஸ்லே என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. இதேப்போன்று மணிகர்னிகா, பங்கா படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை கங்கனா ரணாவத்திற்கு வழங்கப்பட்டது.
![]() |
சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால்
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது மாஸ்டர் நாக விஷாலுக்கு வழங்கப்பட்டது. தமிழில் கே.டி என்ற கருப்புதுரை என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.