25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'அண்ணாத்த, சாணி காயிதம்,' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'குட்லக் சகி' நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் தற்போது மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு நானி ஜோடியாக 'தசரா' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ரஜினிகாந்த், மகேஷ் பாபு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் கீர்த்தி சம்பளத்தை உயர்த்திவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர் கேட்கும் சம்பளம் இதை விட அதிகம், ஆனாலும், 3 கோடிக்கே அவர் நடிக்க சம்மதம் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
நடிகைகளில் நயன்தாரா அதிகபட்சமாக 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மற்ற நடிகைகளின் சம்பளம் நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட குறைவுதான் என்பது கூடுதல் தகவல்.