ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஆச்சார்யா, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். அதில் அகில் அக்கினேனியுடன் இணைந்து நடித்த மோஸ்ட் எலிஸிபிள் பேச்சுலர் என்ற படம் கடந்த 15-ந்தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ளார் பூஜா ஹெக்டே.
இவர் கூறகையில், ‛‛நான் ஒரு திரைப் படத்தை தேர்வு செய்யும்போது எனது உள்ளுணர்வை முழுமையாக நம்புவேன். அப்படி நான் நம்பி நடித்த படம் தான் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர். என் நம்பிக்கை வீண்போகாத வகையில் அப்படம் வெற்றி பெற்றுள்ளது. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எப்போதும் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். அது எப்போதும் உங்களை சரியான திசையில் வழிநடத்தும்'' என்கிறார் பூஜா ஹெக்டே.