திரையுலகில் 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவி | மோகன்லாலுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன் | 1700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' | 'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் | செப்டம்பர் 26ல் மீண்டும் இத்தனை படங்கள் வெளியீடா? | கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | இப்போதைக்கு ஓடிடியில் லோகா ஒளிபரப்பாகாது ; துல்கர் சல்மான் திட்டவட்டம் | மூணாறு படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஜீப் விபத்தில் காயம் | பத்மஸ்ரீ விருதை விட சல்மான்கான் படத்தை இயக்கியது தான் பெரிய சாதனை ; பிரியதர்ஷன் | சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? |
சமந்தா - நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போவதாக அறிவித்து விட்ட நிலையில், தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, இதையடுத்து சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தி பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹந்தியில் அறிமுகமான சமந்தா, தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதோடு தெலுங்கில் கதையின் நாயகியாக நடிப்பதற்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்போகிறார் சமந்தா.