லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன அப்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் இந்த வாரம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என திரையுலகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி சமயத்தில் புதிய படங்கள் வருகை அதிகமாக இருக்கும் அப்போது தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தீபாவளிக்கும், தீபாவளிக்கு பிறகும் பல புதிய படங்கள் வெளிவர உள்ளன. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் தங்களது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நல்ல வசூல் இருக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.