கொரோனா இரண்டாவது அலை, ஊரடங்கு என கடந்த சில மாதங்களாக மலையாள திரையுலகினரும் தங்களது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் இந்த இறுக்கமான சூழ்நிலையில், தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ள அவரது புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரளாகி வருகிறது.
குறிப்பாக அதில் அவரது ஹேர்ஸ்டைல் ரசிகர்களை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தி உள்ளது. தற்போது மம்முட்டி மலையாளத்தில் பீஷ்ம பர்வம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்காக நீளமாக முடி வளர்த்துள்ளார் மம்முட்டி. இன்னும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடியவில்லை என்பதால் இதே ஹேர்ஸ்டைலை மெயின்டெய்ன் பண்ணி வருகிறார் மம்முட்டி