துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர் ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்
இந்த இரண்டு கிராமங்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைப்பதற்கு, மகேஷ்பாபு இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கு, காரணம் இருக்கிறது. மகேஷ்பாபு நடிப்பில் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீமந்துடு என்கிற படம் வெளியானபோது, அந்த சமயத்தில் மகேஷ்பாபு இந்த இரண்டு கிராமங்களையும் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களுக்கான தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்தார். இந்த நிலையில்தான் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்வதும் தனது கடமை என்பதை உணர்ந்து. இந்த பற்றாக்குறை சமயத்திலும். அந்த கிராம மக்களுக்கு அவை தடையில்லாமல் கிடைப்பதற்கு. ஏற்பாடு செய்துள்ளார் மகேஷ்பாபு. அவரது இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.