ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் இயற்கையாகவோ அல்லது கொரோனாவுக்கோ மரணத்தை தழுவி வருகின்றனர். குறிப்பாக மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல கதாசிரியரும் இயக்குனருமான டென்னிஸ் ஜோசப் என்பவர் நேற்று காலமானார். இந்த அதிர்ச்சி விலகும் முன்பே தேசிய விருதுபெற்ற இன்னொரு மலையாள கதாசிரியரும், நடிகருமான மாடம்பு குஞ்சுக்குட்டன் என்பவரும் இன்று மரணத்தை தழுவியுள்ளார்.
எண்பது வயதான மாடம்பு குஞ்சுக்குட்டன் கொரோனா பாதிப்பு அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(மே 11) காலை மரணம் அடைந்தார். இவருடன் பணியாற்றிய பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கும் மேலாக மலையாள திரையுலகில் கதாசிரியராகவும், நடிகராகவும் வலம் வந்த இவர் 2000த்தில் வெளியான கருணம் என்கிற படத்தின் சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றவர்.. மேலும் கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, 2001ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொடுங்கோல்லூர் தொகுதியில் பிஜேபி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.