லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ச்சி அடைந்தவர் தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. முன்னணி இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் டைரக்சனில் இந்தியில் உருவாகும் 'லிகர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தன்னை கதாநாயகனாக நடிக்க அணுகிய, சிரஞ்சீவி பட இயக்குனருக்கு கால்ஷீட் இல்லையென கூறி கையை விரித்து அதிர்ச்சி அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வருகிறார் பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா. இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் இறங்க தீர்மானித்த கொரட்டலா சிவா, இளம் இயக்குனரான வெங்கி குடுமுலா என்பவரை இயக்குனராக்கி படம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜய் தேவரகொண்டாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டுள்ளனர்..
ஆனால், விஜய் தேவரகொண்டாவோ, தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு பிசி என்றும் தற்சமயம் கால்ஷீட் இல்லை என்றும் கூறி, கதை கேட்க கூட நேரம் ஒதுக்க மறுத்து விட்டாராம். சிரஞ்சீவி பட இயக்குனருக்கே இந்த நிலைமையா என விஜய் தேவரகொண்டாவின் அதிரடியை பார்த்து திகைத்து போயுள்ளது டோலிவுட்.