ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கு நடிகர் சிரஞ்ஜீவியும், அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடிக்கும் படம் ஆச்சார்யா. படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. கொரடலா சிவா இயக்கும் இந்தப் இறுதிகட்டத்திற்கு வந்து விட்டது. சண்டை காட்சிகள் சிலவும், ராம் சரண், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி ஒன்று மட்டும் தான் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ராம் சரணும், அவரது மனைவி உபாஷனாவும் கவனித்து வருகின்றனர். இதனால் பவன் கல்யாண், கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிகிறது.
ஆச்சார்யாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா அதிகரித்து வருவதால் ஆச்சார்யா படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த ஆண்டு மே மாதம் வெளிவருவதாக இருந்த இந்தப் படம், நவம்பர், அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.




