'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழகத்தைப்போலவே கேரளாவில் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், புயலில் சேதமடைந்த பாம்பன் பாலத்தை 46 நாட்களில் கட்டி முடித்தவரான மெட்ரோமேன் ஸ்ரீதரன் என்பவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் கேரளா மாநில பாஜகவில் இணைந்த அவருக்கு அக்கட்சி கேரளாவில் உள்ள பாலக்காடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீதரனுக்கு ஆதரவு தெரிவித்து மலையாள நடிகர் மோகன்லால் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்தியர்கள் பெருமைப் படக்கூடிய மனிதராக மெட்ரோமேன் ஸ்ரீதரன் இருக்கிறார். பாம்பம் பாலம், கொங்கன் ரயில்வே பணிகள், கொச்சி டூ டில்லி மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை திட்டமிட்டதை விட குறைவான நாட்களில் முடித்தவர். அதோடு, மீதமுள்ள நிதியை அரசாங்கத்திடம் திருப்பி அளித்தவர். இவரது சேவை நாட்டுக்கு தேவை. கேரள சட்டசபை தேர்தலில் ஸ்ரீதரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் மோகன்லால். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.