விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய, லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கு போவதாகவும் அந்தப்படத்திற்கு எம்புரான் என டைட்டில் வைத்திருப்பதாகவும் பிரித்விராஜும் மோகன்லாலும் இணைந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். இதையடுத்து முதல் பாகத்திற்கு கதை எழுதிய, நடிகரும், கதாசிரியருமான முரளிகோபி இந்த இரண்டாம் பாகத்தின் முழு கதையையும் தற்போது பிரித்விராஜிடம் ஒப்படைத்து விட்டார்.
ஆனால் பிரித்விராஜ், மோகன்லால் இருவரும் மாறிமாறி தங்களது படங்களில் நடித்து வருவதால், எம்பிரான் படம் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.. இந்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என, பிரித்விராஜ் ஏற்கனவே கூறிவந்த நிலையில், தற்போது மோகன்லாலை சந்தித்து இதுகுறித்து பேசி வந்துள்ளார் பிரித்விராஜ். விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பதற்கு அடையாளமாக தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டு, ரசிகர்களுக்கு சூசகமாக செய்தி சொல்லியிருக்கிறார் பிரித்விராஜ்.