பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் |

சமீப காலமாக ரீ ரிலீஸ் படங்கள் அதிகரித்து வருகின்றன. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களாவது வந்து விடுகின்றன. முன்பெல்லாம் பிரபல நடிகர்களின் பிறந்தநாள் அல்லது சம்பந்தப்பட்ட படம் வெளியான பத்தாம், இருபதாம் ஆண்டு கொண்டாட்டம் என கணக்கிட்டு ரீ ரிலீஸ் செய்து வந்த நிலை மாறி தற்போது நினைத்த நேரத்தில் நினைத்த படங்களை ரீ ரிலீஸ் செய்கின்றனர். அந்த வகையில் 2016ல் மே மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நிவின்பாலி நடிப்பில் மூன்று அறிமுக நடிகைகளாக சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் மலையாள திரை உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நிவின்பாலிக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தந்தது. தற்போது பத்து வருடம் கழிந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகிறது என்றாலும், வெளியான சமயத்தில் பெற்ற இதுபோன்ற வரவேற்பை இப்போதும் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




