முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
மலையாள திரையுலகில் விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் ஒரு இயக்குனர் தான் சணல்குமார் சசிதரன். இவரது இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் 'காயாட்டம்' என்கிற படத்தில் நடித்த மஞ்சு வாரியர். இந்த படத்தின் தயாரிப்பாளரும் மஞ்சு வாரியர் தான். ஆனால் இந்த படம் முடிவடைந்த பிறகு மஞ்சுவாரியருக்கும் சணல்குமார் சசிதரனுக்கும் இடையே சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் மஞ்சுவாரியர் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறார், அவரை போன் மூலமாகவோ ஈமெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டால் எந்த பதிலும் இல்லை என தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டார் சணல்குமார் சசிதரன்.
ஆனால் தனக்கு குறுஞ்செய்திகள் மூலமாக தொல்லைகள் தருவதாகவும் சோசியல் மீடியா மூலமாக தன் மீது அவதூறு பரப்புவதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். அதைத்தொடர்ந்து சணல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என கூறப்பட்ட அந்த சமயத்தில் சணல்குமார். வெளிநாட்டில் இருந்ததால் அவர் மீது காவல்துறையில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் இருந்து கேரளாவுக்கு விமானம் ஏறுவதற்காக வந்த சணல்குமார் சசிதரனை அங்கே சென்ற கேரள போலீசார் கைது செய்து கொச்சிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இது குறித்து சணல்குமார் சசிதரன் வெளியிட்டுள்ள பதிவில், “எந்த அடிப்படையில் நான் கேரளா வருகிறேன் என்று தெரிந்த பின்னரும் கூட கேரள போலீசார் மும்பை கிளம்பி வந்து என்னை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர் என்பது வினோதமாக இருக்கிறது. ஆரம்ப நாட்களில் இருந்து மஞ்சுவாரியரின் பாதுகாப்பு குறித்துதான் என்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்தேன். அது குறித்து எந்த ஒரு விசாரணையும் இன்னும் துவங்கப்படவில்லை. சட்டப்படி ஒரு பெண்ணை அவரது பாதுகாப்புக்காக ஒருவர் பின் தொடர்வது என்பது அவரை துன்புறுத்துவதாகாது. மஞ்சுவாரியரே ஒரு முறை என்னை தொடர்பு கொண்டு தானும் தனது மகளும் ஆபத்தில் இருப்பதாக போன் செய்து பேசிய ஆடியோ என்னிடம் ஆதாரமாக இருக்கிறது. அதையும் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆனால் அதை ஒருபோதும் போலீசார் பரிசோதிக்கவே இல்லை” என்று கூறியுள்ளார் சணல்குமார் சசிதரன். தற்போது அவர் போலீஸ் விசாரணையில் இருக்கிறார். விசாரணை முடிந்த பிறகு அவர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் தெரியவரும்.