‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
கடந்த 2022ல் கன்னடத்தில் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி டைரக்ஷனில் அவர் கதாநாயகனாக நடித்த 'காந்தாரா' திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் கூட மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'காந்தாரா தி லெஜன்ட் சாப்டர் 1' என காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை நடிகர் பிரித்விராஜின் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக இதே ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த 'கேஜிஎப் 2, சலார் முதல் பாகம்' மற்றும் 'காந்தாரா' ஆகிய படங்களையும் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிட்டது, அதை எடுத்து தொடர்ந்து அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள காந்தாரா இரண்டாம் பாகத்தையும் பிரித்விராஜ் வெளியிடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை,