ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மலையாள திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களிலும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அதுமட்டுமல்ல தமிழ் மற்றும் தெலுங்கிலும் வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி கோழிக்கோடு பகுதியில் 2 கோடி மதிப்பிலான போதைப் பொருளான கஞ்சாவை கடத்திய ஒரு பெண் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் போலீசாரின் சோதனையில் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது மலையாள திரை உலகை சேர்ந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் நடிகர் ஸ்ரீநாத் பாஷி ஆகியோருக்கு தாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்து வருவதாக கூறினார்கள். இன்னொரு பக்கம் மலையாள நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் கூட, சைன் டாம் சாக்கோ படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என அந்த சமயத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்,
இதனை தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோவை கைது செய்து விசாரித்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அதனை தொடர்ந்து அவர் தற்போது போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் போலீசார் இந்த வழக்கு குறித்த 2000 பக்கங்கள் அடங்கிய சார்ஜ் சீட்டை ஆலப்புழா கூடுதல் இரண்டாவது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி இந்த வழக்கில் ஷைன் டாம் சாக்கோவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போதைப்பொருள் வாங்கும்படி கேட்டதாகவும் ஆனால் நடிகர் ஸ்ரீநாத் பாஷி அதற்கு மறுத்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவரை 23வது சாட்சியாக போலீசார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.