கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை | கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் |
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்புரான் திரைப்படம் வெளியானது. கடந்த 2016ல் இவர்கள் கூட்டணியில் உருவான லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருந்த இந்த படத்தில் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இதில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வெவ்வேறு விதமான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் தான் இது போன்ற வழக்குகளை தொடர்ந்தார்கள். அதேசமயம் மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி ஆரம்பத்தில் இது பற்றி கருத்து கூற மறுத்தாலும் சமீபத்தில் அவரிடம் இது பற்றி கேட்கப்பட்ட போது, “இது எல்லாம் தேவையில்லாத சர்ச்சைகள்.. எல்லாமே மக்களின் மனநிலையை வேறு ஒரு பக்கமாக திருப்பி பிசினஸ் செய்யும் முயற்சி தான் என்று கூறினார்.
அவர் பிசினஸ் செய்கிறார்கள் என்று படக்குழுவினரை கூறினாரா அல்லது இதுபோன்று சர்ச்சையை கிளப்புவர்களை பற்றி கூறினாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியதால் தற்போது இந்த படத்தின் ஆரம்பத்தில் நன்றி கார்டில் காட்டப்பட்ட தனது பெயரை தூக்கி விடுமாறு படக்குழுவினரிடம் சுரேஷ்கோபி கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்களில் ஒன்றாக சுரேஷ்கோபியின் பெயரும் நன்றி கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.