''விவரிக்க வார்த்தையே இல்லை'': லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா நெகிழ்ச்சி | வல்லவன் ஒருவன், முள்ளும் மலரும், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' | 'காளிதாஸ்' 2ம் பாகம் தயாராகிறது |
மலையாள திரையுலகில் ஹீரோக்கள் இயக்குனராவது என்பது அரிதான விஷயம் தான். நடிக்கும் வேலையை மட்டும் பார்த்துவிட்டு போய்விடுவார்கள். அதே சமயம் இதில் சற்று விதிவிலக்காக நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர், ப்ரோ டாடி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார். மூன்றாவதாக எம்புரான் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவ்வளவு ஏன் மோகன்லால் கூட பரோஸ் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். ஆனால் இயக்குனராக அவர் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் மலையாள சினிமாவின் குணச்சித்திர நடிகரும் கதாசிரியருமான அனூப் மேனன், மோகன்லாலை வைத்து தனது புதிய படத்தை இயக்க உள்ளார்.
மலையாள சினிமாவில் குணச்சித்ர நடிகராக இவர் வலம் வந்தாலும் அடிப்படையில் ஒரு கதாசிரியரும் கூட. ஏற்கனவே அவ்வளவாக வரவேற்பு பெறாத மூன்று படங்களையும் இயக்கியுள்ளார் என்றாலும் இவர் கதை எழுதிய படங்கள் பல நல்ல வெற்றியை பெற்றுள்ளன. அதேசமயம் மோகன்லால் உடன் இணைந்து பல படங்களில் நடித்து அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்தான் அனூப் மேனன். அதனாலேயே தற்போது இவருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் மோகன்லால்.