'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு |
தமிழில் பல படங்களை இயக்கிய ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கிய படம் 'கேம் சேஞ்ஜர்'. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றபடி மசாலாப் படமாகத்தான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், 'புஷ்பா 2' போன்ற அதிரடியான ஆக்ஷன் படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு 'கேம் சேஞ்ஜர்' பெரிய திருப்தியைத் தரவில்லை. எதிர்பார்த்ததை விடவும் குறைவான வரவேற்பும் சுமாரான விமர்சனங்களும்தான் படத்திற்குக் கிடைத்துள்ளது.
இதனிடையே, பாலகிருஷ்ணா நடித்து இன்று வெளியான 'டாகு மகாராஜ்' படம் அதிரடியான ஆக்ஷனாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக வருகிறது. அடுத்து ஜனவரி 14 வெளியாக உள்ள வெங்கடேஷ் நடித்த 'சங்கராந்திகி வஸ்தனம்' படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு படங்களும் 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு சரியான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனியர் ஹீரோக்கள் படங்களுக்கு மத்தியில் ஜுனியர் ஹீரோவான ராம் சரண் தாக்கு பிடிப்பாரா என தெலுங்கு திரையுலகத்தில் அச்சப்படுகிறார்களாம்.