சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டான பிரபல ஹீரோக்களின் படங்கள் தற்போது அதிக அளவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் போக்கு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவை தாண்டி தற்போது மலையாள சினிமாவிலும் இது அதிகரித்துள்ளது. குறிப்பாக நடிகர்களின் பிறந்தநாள் அல்லது படம் வெளியாகி 10ம், 20ம் வருட கொண்டாட்டம் என இல்லாமல் ஏற்கனவே ஹிட்டான படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரிலீஸ் செய்தால் ஒரு மிகப்பெரிய லாபம் கிடைக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் தான் இப்போது இந்த ரீ ரிலீஸ் போக்கு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டியின் படங்கள் தான் அதிக அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி கடந்த மாதம் முன்பு 10 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான பாலேரி மாணிக்கம் என்கிற படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. அதேபோல மம்முட்டி நடித்த 'ஆவனாழி' என்கிற போலீஸ் திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் தான் தமிழில் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 2000ல் மம்முட்டி நடிப்பில் வெளியான 'வல்லியேட்டன்' என்கிற திரைப்படமும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஷோபனா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் கலாபவன் மணி, மனோஜ் கே ஜெயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான அந்த வருடத்தில் மிகப்பெரிய வசூலை குவித்த படமாக மாறியது. இந்த நிலையில் அப்போது படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளர்கள் தான் இப்போது இந்த படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்யும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.