குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவர் தன்னுடைய காதலி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கே முறைகேடான வகையில் வசதிகளை பெற்றார் என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அங்கிருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதேசமயம் போலீசார் தர்ஷனுக்கு சிறையில் மொபைல் போன் கிடைத்தது எப்படி என்பதை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் மொபைல் போன் மற்றும் சிம்கார்டை கைப்பற்றி விடுவார்கள் என பயந்து இரண்டையும் சிறைச்சாலை கழிவறையில் போட்டு அழித்துவிட்டார் ரவுடி தர்மா. ஆனாலும் அந்த சிம் கார்டு எண்ணை வைத்து ஆய்வு செய்வதில் அது பணசாவடி பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் மணிவண்ணனிடம் டிரைவராக வேலை பார்க்கும் ஒருவரின் பெயரில் உள்ளது என்றும், அந்த சிம்கார்டு மூலமாக தர்ஷன் வாட்ஸ் அப்பில் பேசி உள்ளார் என்பதும் தெரிய வந்தது.
மணிவண்ணன் தான் இந்த மொபைல் போன் மற்றும் சிம் கார்டை தர்ஷன் இருக்கும் அதே அறையில் இருக்கும் ரவுடி தர்மா மூலமாக மூலமாக கொடுக்கச் செய்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மணிவண்ணனை கைது செய்துள்ளனர். இந்த சிம் கார்டு மணிவண்ணனின் டிராவல்ஸ் ஓட்டுனராக இருக்கும் ஒருவரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அந்த நபர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மணிவண்ணனை கைது செய்துள்ளனர்.