ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என அவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கே முறைகேடாக பல வசதிகளை பெற்றதாக தெரியவந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது தர்ஷன் தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவருக்கு பெங்களூரில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. அதேசமயம் பெங்களூருக்கு அல்லாமல் பெல்லாரியிலேயே உள்ள விஜயநகர இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட தர்ஷனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தர்ஷன் மீண்டும் பெல்லாரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்த ஒன்றிரண்டு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இருப்பினும் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை உடனடியாக செய்தாக வேண்டும் என்றும் அதனால் அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் அவரது தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.