அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் ஜெயசூர்யா. சில நாட்களுக்கு முன்பு நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, நடிகை ஒருவர், ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என காவல்துறையில் புகார் அளித்தார். இது குறித்து ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் இது போன்ற சங்கடமான சூழலில் இருக்கும் ஜெயசூர்யா, மன அமைதிக்காக சமீபத்தில் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
அப்போது பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியும், ஜெயசூர்யாவுடன் இதில் இணைந்து பங்கேற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெயசூர்யா, 'காந்தாராவை சந்தித்த கத்தனார்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கத்தனார் என்பது ஜெயசூர்யா தற்போது நடித்து வரும் வரலாற்று படத்தின் பெயர். இந்த படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்க முக்கிய வேடத்தில் பிரபுதேவா நடிக்கிறார். கடந்த வருடம் ஜெயசூர்யா நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருந்தார் தனது வாழ்நாள் கனவு நிறைவேறியது போன்ற இந்த சந்திப்பிற்கு உதவி செய்த ரிஷப் ஷெட்டிக்கு நன்றி என்று அப்போதே அவர் கூறியிருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் தற்போது கொல்லூரில் மூகாம்பிகை கோவில் தரிசனத்துக்காக வந்த ஜெயசூர்யாவுடன் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் ரிஷப் ஷெட்டி.