ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
வளர்ந்து வரும் இளம் மலையாளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. பஹத் பாசில் நடித்த 'கும்பலாங்கி நைட்ஸ்' படம் மூலம் ஓரளவு வெளிச்சம் பெற்ற இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். அந்த படத்தில் குணா குகைக்குள் தவறி விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான். அதே சமயம் இவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராதது, படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டு மற்றும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தொகுப்பாளரை அநாகரிகமாக பேசி அதற்காக கைதானது, அதனால் இவர் மீது ரெட் கார்டு போடப்படும் அளவுக்கு நிலைமை சென்றது என தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர் கொச்சியில் உள்ள மட்டாஞ்சேரி பகுதியில் கார் ஓட்டி வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு உதவி செய்யாமல் இடித்த வேகத்தில் நிற்காமல் சென்று விட்டார். அந்த இளைஞருக்கு வலதுகாலில் முறிவு ஏற்பட்டது. இது குறித்து அந்தபகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது ஸ்ரீநாத் பாஷியின் கார் என்பது தெரிய வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஸ்ரீநாத் பாஷியின் டிரைவிங் லைசென்ஸை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து உள்ளனர்.