ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் செய்து வரும் அவர் முதலில் தான் அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடாக பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இன்னொரு பக்கம் தொடர்ந்து தனக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தர்ஷன். ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்கள் சிலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பெங்களூரு நீதிமன்றம் அவர் கடைசியாக விண்ணப்பித்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கடந்த மாதம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் தள்ளி வைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை வந்த போது மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நீதிமன்றம். அதே சமயம் தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்கிற ஒரு ஆறுதலான தகவலையும் அதில் தெரிவித்துள்ளது.