ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
'கேரளாவின் பாக்யராஜ்' என்று வர்ணிக்கப்பட்டவர் பாலச்சந்திர மேனன். பாக்யராஜின் பாணியில் நுட்பமான திரைக்கதையை கொண்ட படங்களை இயக்கி அவற்றில் தானே நடித்தார். ஷோபனா, கார்த்திகா உள்பட பலரை இவர் தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மலையாள சினிமாவின் முக்கியமான ஆளுமையாக கருதப்படும் பாலச்சந்திரன் மீது மினு முனிர் என்ற கவர்ச்சி நடிகை பாலியல் புகார் கூறியுள்ளார்.
கேரள அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவிடம் அவர் அளித்துள்ள புகார் மனுவில் “கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில் பாலச்சந்திர மேனன் இயக்கி நடித்த 'தே இங்கோட்டு நோக்கியே' என்ற படத்தின் படப்பிடிப்பின்போது ஓட்டல் அறைக்கு வரவழைத்தார். ஓட்டல் அறைக்கு சென்ற போது அவர் உடன் 3 இளம் பெண்கள் மற்றும் சில ஆண்களும் இருந்தனர். அப்போது என்னை அவர் கட்டாயப்படுத்தி குரூப் செக்ஸை பார்க்க சொன்னார். நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். வெளியே சொன்னால் படத்தில் நடித்துள்ள காட்சிகளை நீக்கி விடுவேன் என்று மிரட்டினார். அது தான் எனக்கு முதல் படம் என்பதாலும், எனக்கு வாய்ப்பு தந்தவர் என்பதாலும் நான் பயந்து இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. மேலும் சில படங்களில் பாலியல் தொல்லை ஏற்பட்டதால் விரக்தியில் சினிமாவை விட்டு விலகி விட்டேன்” என்று அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.
இதே நடிகை தான் முகேஷ், மணியன் பிள்ளை, ஜெயசூர்யா ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.