நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் |
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு நடனம் வடிவமைக்கும் பிஸியான நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் இவரது நடன குழுவில் பணியாற்றும் ஒரு பெண், ஜானி மாஸ்டர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார் என காவல்துறையில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஜானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல அவர் முக்கிய பொறுப்பு வகித்த பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஜானி மாஸ்டரை பொருத்தவரை அல்லு அர்ஜுனின் படங்களுக்கு தொடர்ந்து அவர் நடனம் அமைத்து வருகிறார். குறிப்பாக புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திலும் ஜானி மாஸ்டர் சில பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கும் அவர் நடனம் வடிவமைக்க இருந்தார் என்றும் ஆனால் நிலைமை தலைகீழாக மாறியதால் அவர் அந்த பாடலுக்கு பணியாற்றவில்லை என்றும் படத்தின் தயாரிப்பாளரான மைத்திரி மூவி மேக்கர்ஸ் ரவி கூறியுள்ளார்.
இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாது வதாலரா 2 படத்தின் வெற்றி சந்திப்பில் கலந்து கொண்டபோது இவரிடம் ஜானி மாஸ்டரின் கைது குறித்தும் புஷ்பா 2 திரைப்படத்தில் அவரது பங்களிப்பு குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர் புஷ்பா 2 படத்தில் ஜானி மாஸ்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அந்த பெண் இருவருமே பணியாற்றினார்கள். அவர்கள் பணியாற்றிய வரையில் அவர்களுக்கான ஊதியம் அனைத்தும் கொடுத்து செட்டில் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குள் இருக்கும் புகார் அவர்களது தனிப்பட்ட விஷயம். அது எங்களது படத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.