ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய அளவில் மலையாளம் மட்டுமல்ல, தமிழக ரசிகர்களையும் ஒருசேர கவர்ந்தது. இந்த படத்தில் நடித்த கதாநாயகி மமிதா பைஜூ மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்திருந்த ஹீரோ நஸ்லேன் அவரது நண்பராக நடித்திருந்த சங்கீத் பிரதாப் ஆகியோரும் பிரபலமானார்கள்.
இந்த நிலையில் சங்கீத் பிரதாப், நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் கடந்த ஜூலை மாதம் தாங்கள் நடித்து வந்த ப்ரொமான்ஸ் என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ரொம்பவே பாதிப்புக்குள்ளான சங்கீத் பிரதாப் தற்போது சிகிச்சையில் ஓரளவுக்கு நன்கு குணமாகி தற்போது மீண்டும் ப்ரொமான்ஸ் படத்தின் படப்பிடிப்பிற்கு திரும்ப இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம் வாழ்வில் எதுவுமே திட்டமிட்டபடி நடப்பதில்லை. அந்த விபத்தும் அப்படித்தான். விபத்து நடந்த பின்பு அதை நான் சாதாரணமாக தான் நினைத்தேன். ஆனால் மருத்துவமனையில் ஒரு செவிலியர் எவ்வளவு ரிஸ்க்கான நிலையில் நான் இருக்கிறேன் என்று கூறியபோது அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் மருத்துவ சிகிச்சை மற்றும் என் கூடவே இருந்து என்னை குழந்தை போல கவனித்துக் கொண்ட எனது மனைவியின் அர்ப்பணிப்பு ஆகியவை என்னை குணப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு வந்துள்ளது. இப்போது மீண்டும் ப்ரொமான்ஸ் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல தயாராகி விட்டேன். அந்தநாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.