ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார். கடந்த வருடம் வெளியான ஜெயிலர் படத்தின் மூலமாக கன்னடத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் அதிகமான ரசிகர்களை பெற்றவர். இதைத்தொடர்ந்து தற்போது கன்னடத்தில் உருவாக இருக்கும் பைரவனா கோனே பாட்டா என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார். பனிரெண்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக, வரலாற்றில் மறைக்கப்பட்ட சில பக்கங்களை வெளிப்படுத்தும் விதமாக அதேசமயம் சில புனைவுகளையும் சேர்த்து இந்த படம் உருவாக இருக்கிறது. இயக்குனர் ஹேம்நாத் ராவ் இயக்குகிறார்.
இந்த படத்தில் சிவராஜ்குமாரின் கதாபாத்திர பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் உயரமான இடத்தில் நடைபெற்ற இதன் போட்டோ ஷூட்டுக்காக கிட்டத்தட்ட 400 படிகள் வரை ஏறி கலந்து கொண்டுள்ளார் சிவராஜ்குமார். தனது 61 வயதிலும் ஒரு போட்டோஷூட்டுக்காக சிவராஜ்குமார் இவ்வளவு தூரம் மெனக்கெடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போய் உள்ளார் இயக்குனர் ஹேம்நாத் ராவ்.
சிவராஜ்குமார் கூறும்போது, “என்னுடைய தந்தை அவரது காலகட்டத்தில் இதேபோன்று பல படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் அதிக அளவிலான ரசிகர்களின் அன்பையும் சம்பாதித்தார். அந்த வகையில் இந்த படத்தின் கதை ஒவ்வொரு அங்குலத்திலும் என்னை கவர்ந்துள்ளது. பைரவா கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியே. ஹேம்நாத் ராவ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.