அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் |
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அவரது 12வது படம் தற்போது தயாராகி வருகிறது. ஒரு ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதன் முறையாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெர்சி படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை சென்றனர். இலங்கையில் இறங்கி தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்குச் சென்ற விஜய் தேவரகொண்டாவுக்கு அங்கு இலங்கையின் பாரம்பரிய கண்டியன் இசைக்குழுவினரின் நடனத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.